Editorial / 2021 செப்டெம்பர் 14 , பி.ப. 08:54 - 0 - {{hitsCtrl.values.hits}}

எம்.இஸட்.ஷாஜஹான்
எதிர்வரும் (20) திங்கட்கிழமைக்குப் பின்னர் தனிமைப்படுத்தல் ஊரடங்கு நாட்டில் நடைமுறைப்படுத்தப்படும் என தான் கருதவில்லை என சுகாரதார இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே தெரிவித்தார்.
சீதுவை பொது சுகாதார பிரிவு காரியாலயத்திற்கு (எம்.ஓ.எச்) இன்று (14) களவிஜயமொன்றை அவர் மேற்கொண்டிருந்தார். அங்கு ஊடகவியாலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
சிறு குழந்தைகளுக்கு பல்வேறு வகையான தடுப்பூசிகள் ஏற்றப்படுகின்றன. பெற்றோர்கள் உரிய காலத்தில் தமது குழந்தைகளுக்கு அவற்றை ஏற்றுகின்றனர். ஆனால் பெரியவர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் போதே பல்வேறு பொய் பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன எனத் தெரிவித்த அவர், கொரோனா தடுப்பூசியால் யாருக்கும் பாதிப்பு ஏற்படப்போவதில்லை என்றார்.
பாடசாலையை ஆரம்பிக்க வேண்டும் என்றால் வீட்டில் உள்ள பெரியவர்கள் தடுப்பூசிகளை ஏற்றிக்கொள்ள வேணடும் 12 வயதுக்கு மேற்பட்ட அல்லது 15 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசிகளை ஏற்றுவது தொடர்பாக விஞ்ஞான ரீதியில் ஆராய்ந்து முடிவெடுக்கப்படும் எனத் தெரிவித்த அவர், பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் முன்பாடசாலைகள் யாவும் விரைவில் ஆரம்பிக்கப்படவேண்டும் என்றார்.
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago