Freelancer / 2026 மே 07 , மு.ப. 04:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
“எங்களைச் சிறையில் அடைக்க வேண்டும் என ஆட்சியாளர்கள் தீர்மானித்து, அதற்கான பட்டியலையும் தயாரித்து முடித்துவிட்டனர்” என்று புதிய ஜனநாயக முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (06) நடைபெற்ற ‘மீட்பு, புனர்வாழ்வு மற்றும் கடனிறுக்க வகையின்மை (கூட்டிணைப்பு மற்றும் தனிப்பட்ட) சட்டமூலம்’ மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் பேசுகையில்:
“வெள்ளையர்களால் அமைக்கப்பட்ட புகையிரதப் பாதையில், இன்னும் கண்டிக்கு முறையாகப் புகையிரதங்களை அனுப்ப முடியாத நிலை காணப்படுகின்றது. நாவலப்பிட்டியிலிருந்து நானுஓயா வரை அதிகமான மக்கள் புகையிரத சேவையையே பயன்படுத்துகின்றனர். ஆனால், அனர்த்தம் ஏற்பட்டு எட்டு மாதங்கள் கடந்துள்ள நிலையிலும், இன்னும் பதுளைக்கான புகையிரத சேவை சீராகவில்லை. கண்டி வரை கூட புகையிரதங்களை அனுப்ப முடியவில்லை. இந்தப் புகையிரதப் பாதைகளை உடனடியாகப் புனரமைக்குமாறு அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கின்றோம்.
இதேவேளை, மே தினக் கூட்டங்களில் வழக்குகள் குறித்தே ஆளுங்கட்சியினர் உரையாற்றினர். இவர்களின் கருத்துகளால் நீதிபதிகள் தீர்ப்பு வழங்குவதில் நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
இவ்வாறான செயற்பாடுகளால் நீதித்துறைக்கு ஏற்படும் நிலைமை என்ன? எங்களைச் சிறையில் அடைக்க இவர்கள் பட்டியலைத் தயாரித்துவிட்டனர். இதனால் நான் இனி சட்டத்தரணிகளை அமர்த்திப் பயன் ஏதுமில்லை. எனவே, நான் இனி சட்டத்தரணிகளை அமர்த்தப்போவதில்லை; எந்த வழக்கைப் பேசியாவது என்னை உள்ளே தள்ளுங்கள்,” என்றார்.
2 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago