Editorial / 2019 ஜூலை 20 , பி.ப. 01:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொத்துஹெரையுக்கும் பொல்காவலைக்கும் இடையிலான ரயில் பாதையின் திருத்த வேலைகள் காரணமாக, இன்று இரவு சேவையில் ஈடுபட இருந்த எட்டு ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
இதற்கு அமைவாக கொழும்பு கோட்டையில் இருந்து காங்கேசந்துறை, மட்டக்களப்பு, தலைமன்னார் மற்றும் திருகோணமலைக்கிடையிலான சேவையில் ஈடுபடவிருந்த இரவு தபால் ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
இதற்கு மேலதிகமாக இந்த ரயில் நிலையங்களில் இருந்து கொழும்பு கோட்டைக்கு வரவுள்ள இரவு தபால் ரயில் சேவைகள் 4 இன்றைய தினம் சேவையில் ஈடுபடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நேற்று இரவு கொழும்பு கோட்டையில் இருந்து காங்கேசந்துறை நோக்கிச் சென்ற இரவு தபால் ரயில் ஓமந்தை புளியங்குளம் என்ற இடத்தில் யானையுடன் மோதியுள்ளது. இருப்பினும் ரயில் சேவைக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.
6 hours ago
6 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
6 hours ago
7 hours ago