Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2018 டிசெம்பர் 03 , மு.ப. 11:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
எதிர்கட்சித் தலைவர் ஒருவரால் நாட்டின் பிரதமரை தீர்மானிக்கும் நிலை இன்று நாட்டில் ஏற்பட்டுள்ளதாகவும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரகொடி தெரிவித்துள்ளார்.
அத்துடன் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு கிடைக்கப்பெறும் வரை அரசாங்கத்தில் எந்தவொரு மாற்றமும் நிகழாதெனவும் சில தரப்பினர் தெரிவிப்பது போல் எந்தவொரு மாற்றத்தையும் செய்ய முடியாதென்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சி மக்களை தவறாக வழிநடத்துவதால் தற்போது நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளதாகவே ஜனாதிபதியின் வாதங்கள் அமைந்துள்ளன. எனவே ஜனாதிபதியின் வாதத்துக்கமைய கலைக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத்தில் பிரதமர், அமைச்சர்கள், பிரதி மற்றும் இராஜாங்க அமைச்சர்களை நியமிக்க முடியாதென்பதே யதார்த்தமாகும் என சந்திம வீரகொடி தெரிவித்துள்ளார்.
எனவே அந்த யதார்த்தத்தை ஐக்கிய தேசியக் கட்சி பொது மக்களிடம் மறைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
23 minute ago