2026 மே 11, திங்கட்கிழமை

dd

எதிர்க்கட்சித் தலைவரின் விளக்கமறியல் நீடிப்பு

Editorial   / 2019 ஜூலை 17 , மு.ப. 11:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீர்கொழும்பு நகர சபையின்  எதிர்க்கட்சித் தலைவர் ரொய்ஸ் பெர்ணான்டோவை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இன்றுவரை விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ரொய்ஸ் பெர்ணான்டோ முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இதன்போது, அவரை எதிர்வரும் 31ஆம் திகதிவரை விளக்கமறியலில் தொடர்ந்து வைக்குமாறு  நீர்கொழும்பு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்து, நபர் ஒருவரை தாக்கி கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் அவர் கடந்த 7ஆம் திகதி கைதுசெய்யப்பட்டிருந்தார்.

கடந்த மாதம் 23ஆம் திகதி செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய நீர்கொழும்பு பகுதியில் வைத்து, கட்டான பொலிஸாரால் அவர் கைதுசெய்யப்பட்டார்.

இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பாக இதுவரையில் 5 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .