2025 மே 08, வியாழக்கிழமை

”எந்தக் கட்சியுடனும் கைகோர்க்க மாட்டோம்”

Simrith   / 2025 மே 08 , மு.ப. 11:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

உள்ளூராட்சி மன்றங்களில் பெரும்பான்மையைப் பெறுவதற்காக தனது கட்சியான சர்வஜன பலய எந்த அரசியல் கட்சியுடனும் கூட்டணி வைக்காது என்று பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜெயவீர தெரிவித்துள்ளார். 

ஊடகங்களுக்கு உரையாற்றிய சர்வஜன பலயவின் தலைவர் ஜெயவீர, அரசியல் ரீதியாக ஈடுபடுவதற்காக ஒரு கட்சியுடன் அல்லது சக்தியுடன் கைகோர்க்க கட்சிக்கு எந்த அவசியமும் இல்லை என்றார். 

"சர்வஜன பலய அத்தகைய எந்த முடிவையும் எடுக்கத் தயாராக இல்லை. நாங்கள் வேறுபட்ட அரசியல் கலாச்சாரத்தைக் கொண்ட ஒரு சுயாதீனக் கட்சி. நாங்கள் வேறு எந்தக் கட்சியுடனும் கூட்டணி வைக்கவோ அல்லது ஆதரிக்கவோ மாட்டோம்," என்று அவர் கூறினார். 

உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பிறகு, எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி (SJB) தன்னைத் தொடர்பு கொண்டதை பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜெயவீர உறுதிப்படுத்தினார். 

செவ்வாய்க்கிழமை (மே 07) நடைபெற்ற 2025 உள்ளூராட்சித் தேர்தலில், சர்வஜன பலய 294,681 வாக்குகளைப் பெற்று, 07 உள்ளூராட்சி மன்றங்களில் 266 இடங்களைப் பெற்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X