Editorial / 2025 நவம்பர் 03 , மு.ப. 11:04 - 0 - {{hitsCtrl.values.hits}}

‛‛என்னிடம் பணம் வாங்கி கொண்டு கர்ப்பமாக்கி விட்டு செல்லுங்கள்'' என்ற ஆன்லைன் விளம்பரத்தை பார்த்து ஒப்பந்ததாரர் ஒருவர் ஏமாந்து போயுள்ளார். பெண் ஒருவர் வீடியோவில் பேசி அவரை மயக்கியதால் ஆன்லைன் விளம்பரத்தை நம்பி ரூ.11 லட்சத்தை இழந்துள்ளார். அதுபற்றிய திடுக்கிடும் தகவல்கள் வருமாறு:
மகாராஷ்டிரா மாநிலம் புனேவை சேர்ந்த ஒப்பந்ததார் சமீபத்தில் ஆன்லைனில் விளம்பரம் ஒன்றை பார்த்தார். அதில், "Looking for a man who can make me pregnant" என இருந்தது. அதாவது பெண் ஒருவர் உடலுறவுக்கு அழைத்து தன்னை கர்ப்பிணியாக்கினால் போதும். அதற்காக பணம் தருவதாக தெரிவித்து இருந்தது.
இதை பார்த்த ஒப்பந்ததாரக்கு ஆசை வந்தது. எப்படியாவது அந்த பெண்ணை தொடர்பு கொண்டு அவருடன் உல்லாசமாக இருக்க வேண்டும். இதன்மூலம் அந்த பெண் கர்ப்பமாவார். தனக்கும் பணம் கிடைக்கும் என்று ஒப்பந்ததார் நினைத்தார். மேலும் அந்த விளம்பரத்தை அவர் கிளிக் செய்து பார்த்தார்.
செல்போன் எண் உள்பட பிற விவரங்களை அளித்தார். அதன்பிறகு அடுத்து சிறிது நேரத்தில் பெண் ஒருவர் வீடியோ ஒன்றை அவருக்கு அனுப்பி வைத்தார். அதில் அந்த பெண், ‛‛நான் கர்ப்பமாகவில்லை. கர்ப்பமாக்க உதவும்படி கூறினார்''. இதனால் அதனை உண்மை என்று ஒப்பந்ததாரர் நம்பினார்.
அதன்பிறகு அவரை சிலர் தொடர்பு கொண்டு பணம் கேட்டனர். பதிவு கட்டணம், மெம்பர்ஷிப் கட்டணம், ரகசியத்தை காப்பதற்கான கட்டணம், நடைமுறை கட்டணம் என்று தொடர்ந்து ஒப்பந்ததாரரிடம் கேட்டனர். ஒப்பந்தாரர் சற்றும் யோசிக்கவில்லை. எப்படியாவது அந்த பெண்ணுடன் உடலுறவு வைத்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இருந்தார். இதனால் அவருக்கு பணம் பெரிதாக தெரியவில்லை.
அந்த நபர்கள் கேட்கும்போதெல்லாம் ஒப்பந்ததாரர் பணம் அனுப்பி உள்ளார்.மொத்தமாக ரூ.11 லட்சம் வரை பணம் அனுப்பி உள்ளார். அதன்பிறகும் ஒப்பந்ததாரரை அவர்கள் அழைக்கவில்லை. இதனால் அவருக்கு சந்தேகம் எழுந்தது. மேலும் அவரால் யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. அப்போது தான் ஆன்லைன் மோசடி கும்பலிடம் ஏமாந்ததை அறிந்து கொண்டார்.
ரூ.11 லட்சம் பறிபோனதால் அவர் சம்பவம் குறித்து பொலிஸில் புகார் செய்தார். பொலிஸார் வழக்கப்பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர். இதுபற்றி பொலிஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் சாவந்த் கூறுகையில், ‛‛ஒப்பந்ததாரரிடம் பல்வேறு காரணங்களை கூறி ரூ.11 லட்சத்தை மோசடி கும்பல் பறித்துள்ளது. இது மக்கள் அனைவருக்குமான பாடம். ஆன்லைன் விளம்பரங்களை நம்பி பணம் செலுத்தி ஏமாற வேண்டாம். மக்கள் உஷாராக இருக்க வேண்டும்'' என்றார்.
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago