Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 09, வெள்ளிக்கிழமை
Freelancer / 2023 செப்டெம்பர் 26 , மு.ப. 03:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட கடன் வசதிகளின் கீழ் மேற்கொள்ளப்படும் மீளாய்வு கலந்துரையாடலில் முதலாவது மீளாய்வின் இறுதி கலந்துரையாடலின் நிமித்தம் வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான சந்திப்பொன்று எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் திங்கட்கிழமை (25) இடம்பெற்றது.
இந்நாட்டின் பல்வேறு பொருளாதார, சமூக, அரசியல் விடயங்கள் தொடர்பில் இரு தரப்பினருக்கும் இடையில் இங்கு நீண்ட கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றது.
குறிப்பாக சர்வதேச நாணய நிதியத்துடன் தற்போதைய அரசாங்கம் செய்துகொண்டுள்ள ஒப்பந்தம் தொடர்பில் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.
குறிப்பாக அரசாங்கம் உள்நாட்டுக் கடனை மறுசீரமைப்பதன் மூலம் உழைக்கும் மக்களின் ஊழியர் சேமலாப நிதிய மிகுதியில் ஏற்படுத்தியுள்ள பாதிப்பு குறித்தும் எதிர்க்கட்சித் தலைவர் வருகை தந்திருந்த பிரதிநிதிகளிடம் தெரியப்படுத்தினார்.
அவ்வாறே, ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தவுடன், எட்டப்பட்ட ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்து மக்களுக்கு சாதகமான உடன்பாட்டை மேற்கொண்டு அதன் மூலம் நாட்டை கட்டியெழுப்புவதற்கான மூலோபாயங்கள் குறித்தும் அவதானம் செலுத்தப்படும் என்றும் எதிர்க்கட்சித் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago