2025 மே 21, புதன்கிழமை

எம்.பி பதவியை துறந்து பெண்ணுக்கு வழங்குவேன்

Freelancer   / 2025 மார்ச் 09 , மு.ப. 02:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

எமது தேசியத் தலைவரின் காலத்தில் பெண்கள் இரவு 12 மணிக்கு  கூட சுதந்திரமாக  வெளியில்  செல்லும் நிலை காணப்பட்டது. ஆனால் தற்போது  பெண் எம்.பி  ஒருவர் பகலில் கூட வெளியில் செல்ல முடியாத நிலையுள்ளது . எதிர்வரும் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதம் பாராளுமன்ற உறுப்புரிமையை  நான் இராஜினாமா செய்து அந்த பதவியை பெண் ஒருவருக்கு வழங்குவேன் என யாழ். மாவட்ட எம்.பி.யுமான  இ அர்ச்சுனா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் சனிக்கிழமை (08)  நடைபெற்ற  2025 ஆம் ஆண்டுக்கான  வரவு- செலவுத் திட்டத்தின் குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். 

எமது தேசியத் தலைவரின் காலத்தில் பெண்கள்  இரவு 12 மணிக்கு  கூட சுதந்திரமாக  வெளியில்  செல்லும் நிலை காணப்பட்டது. ஆனால் தற்போது  பெண் எம்.பி ஒருவர் பகலில் கூட வெளியில் செல்ல முடியாத நிலை யுள்ளது .
 
இந்த நாட்டில் முஸ்லிம் மக்கள்  வாழ்கிறார்கள். ஆனால் இந்த அமைச்சரவையில் ஒரு முஸ்லிம் பிரதிநிதி   கூட இல்லை. அதேபோல் கிளின் ஸ்ரீ லங்கா  செயலணியில் ஒரு முஸ்லிம் பிரதிநிதி கூட இல்லை இவ்வாறான நிலையில் எவ்வாறு  தேசிய  நல்லிணக்கத்தை  கட்டியெழுப்ப முடியும்? என்றும் வினவினார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .