Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2025 ஜூலை 24 , பி.ப. 05:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
சனிக்கிழமை (19) கைது செய்யப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானகேவின் மகன் இரசிக விதான, பிணையில் விடுதலைச் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மருமகன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இவ்விருவரும் மத்துகம நீதவான் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை (24) மாலை ஆஜர்படுத்தப்பட்டனர்.
பாணந்துறை வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினரால் அவர் மத்துகம பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். அவர், மத்துகம பிரதான நீதவான் ஏ.ஐ. ஹெட்டிவத்த முன்னிலையில் ஞாயிற்றுக்கிழமை (20) ஆஜர்படுத்தப்பட்டார். அவரை அடுத்த மாதம் 1 ஆம் திகதி வரை விளக்கமறியில் வைக்குமாறு பிரதான நீதவான் உத்தரவிட்டிருந்தார். எனினும், அவருக்கு வியாழக்கிழமை (24) பிணை வழங்கப்பட்டுள்ளது.
பாகங்களிலிருந்து இணைக்கப்பட்ட ஜீப் தொடர்பான விசாரணை தொடர்பாக, பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகளைக் கைது செய்ய களுத்துறையில் உள்ள நுககொட வீட்டிற்கு, சனிக்கிழமை (19) சென்ற போதிலும், சந்தேக நபரும் அவரது கணவரும் வீட்டில் இல்லை என்று பாணந்துறை மத்திய ஊழல் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் பொதுஜன ஐக்கிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபேகுணவர்தனவின் மருமகன், நீதிமன்றத்தில் வியாழக்கிழமை (24) ஆஜரானார். அவரை, எதிர்வரும் 1ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago