2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

எம்.பி.க்களின் சம்பளம், படிகளை அதிகரிக்கத் தீர்மானம்

Thipaan   / 2015 டிசெம்பர் 24 , மு.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

கெலும்பண்டார

நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் மற்றும் இதர படிகளை அதிகரிப்பது தொடர்பாக, உயர்மட்டக்குழுவொன்று தீர்மானித்துள்ளதாகவும் ஆனால், அதிகரிப்பது எவ்வளவாக இருக்கும் என்பதில் உடன்பாடு எட்டப்படவில்லை எனவும், நேற்றுக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.

எம்.பிக்களின் வசதிகள் மற்றும் சிறப்புச் சலுகைகள் தொடர்பாக நாடாளுமன்ற அவைக்குழு, நீண்ட நேரமாக பேசியது. இப்போது  எம்.பியொருவர் 54 ஆயிரம் ரூபாயையும், பிரதி அமைச்சரொருவர் 60 ஆயிரம் ரூபாயையும்

அமைச்சர் 65 ஆயிரம் ரூபாயையும் மாத சம்பளமாக பெறுகின்றனர்.

இதைவிட இவர்களுக்கு வாகன எரிபொருள், விசேட எரிபொருள் படியும், தொலைபேசி படியும் வழங்கப்படுவது, இந்த கொடுப்பனவுகள் நீண்ட காலமாக மாற்றப்படாது உள்ளது. இதனால் எம்.பிக்கள் தமக்கான கொடுப்பனவுகள் யதார்த்தத்தில் அடிப்படையை அதிகரிக்க வேண்டுமெனக் கோருகின்றனர்.

ஒரு நாள் அமர்வுக்கும் குழுக்கூட்டங்களிலும் 500 ரூபாய் வழங்கப்படுகிறது. இதை 15 ஆயிரம் தொடக்கம் 20 ஆயிரம் ரூபாய் வரையில் அதிகரிக்க வேண்டுமென சிலர் கேட்டுள்ளனர். ஆயினும் பொதுமக்களில் ஆட்சேபிக்கப்பட்ட பலமாக இருக்குமென அஞ்சும் அரசியல் கட்சிகள் இதற்கு தயக்கம் காட்டுகின்றன.

எம்.பிக்களுக்கு சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கை 2006 ஆம் ஆண்டில் அங்கிகரிக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X