Freelancer / 2026 மார்ச் 11 , மு.ப. 09:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
உள்நாட்டில் எரிபொருள் விநியோகத்தை தடையின்றி முன்னெடுப்பதற்காகவே விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை 36 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ள பின்னணியில், இலங்கையிலும் எரிபொருள் விலையை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
தனியார் நிறுவனங்கள் இறக்குமதியை நிறுத்தும் அபாயம் மற்றும் உலக சந்தை நிலவரங்களைக் கருத்திற்கொண்டு, விலை சூத்திரத்தின் அடிப்படையில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
இலங்கையில் மாத்திரம் எரிபொருள் விலை அதிகரிக்கப்படவில்லை. பல்வேறு நாடுகள் எரிபொருள் விலைகளை அதிகரித்ததோடு மாத்திரமின்றி வலுசக்தி பயன்பாட்டை குறைப்பதற்கான நடவடிக்கைகளைக் கூட முன்னெடுத்துள்ளன.
உலக சந்தையின் விலை உயர்விற்கமைய நாமும் எரிபொருள் விலையை அதிகரிக்காவிட்டால், நாட்டிலுள்ள தனியார் எரிபொருள் விநியோக நிறுவனங்கள் இறக்குமதியை நிறுத்தும் அபாயம் காணப்படுகிறது.
அவ்வாறு தனியார் நிறுவனங்கள் எரிபொருள் விநியோகத்தை நிறுத்தினாலோ அல்லது குறைத்தாலோ விநியோகத்தில் சிக்கல் ஏற்படும். அது மாத்திரமின்றி கடந்த வாரங்களில் எரிபொருள் பாவனையானது வழமைக்கு மாறான அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
எனவே இருப்பில் காணப்பட்ட எரிபொருட்கள் நிறைவடைந்ததோடு, புதிய கப்பல்களில் இறக்குமதி செய்யப்பட்ட எரிபொருட்கள் அதிகரிக்கப்பட்ட விலையிலேயே கொள்வனவு செய்யப்பட்டது. அந்த வகையில் இதை விட அதிக விலை அதிகரிப்பு நடைமுறைப்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.
எனினும் மக்களின் நலன்கருதி சிறியளவிலான விலை அதிகரிப்பே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. விலை அதிகரிப்பினால் எரிபொருட்களின் பாவனையை மக்கள் வரையறுத்துக் கொள்வர் என்றும் எதிர்பார்க்கின்றோம். உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிப்பை கவனத்தில் கொண்டு, நிதி அமைச்சுடன் இணைந்து குறுகிய காலத்துக்கு நிவாரணம் வழங்குவது குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
உலக நாடுகளின் போர் நிலைவரம் தொடர்பில் எவ்வித எதிர்வுகூறல்களையும் கூற முடியாது என்பதால், இனிவரும் நாட்களில் எரிபொருட்களின் விலை திருத்தங்கள் தொடர்பிலும் தற்போது ஸ்திரமாக எதையும் கூற முடியாது. வழமையான விலை சூத்திரத்துக்கமையவே இம்முறையும் விலைத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார். R
35 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
1 hours ago