Editorial / 2020 ஜூன் 10 , மு.ப. 10:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலகச் சந்தையில் எரிபொருள்களின் விலைகள் குறைவடைந்துள்ள போதிலும், அதன் பயனைப் பொதுமக்கள் அனுபவிக்க முடியாதளவுக்கு, தற்போதைய அரசாங்கத்தால் வரிக்கு மேல் வரி விதிக்கப்படுவதாக, மக்கள் விடுதலை முன்னணி குற்றஞ்சாட்டியது.
இது தொடர்பில், கொழும்பில் நேற்று (09) ஊடகச் சந்திப்பொன்றை நடத்திய அக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி, ஒக்டேன் 92 ரக பெற்றோல், லீற்றருக்கு 41.79 ரூபாய்ப்படியே இலங்கைத் துறைமுகத்தில் இறக்கப்படுவதாகவும் ஆனால் பொதுமக்களுக்கு அது, 137 ரூபாய்க்கே விற்பனை செய்யப்படுவதாகவும் குற்றஞ்சாட்டினார்.
அதேபோல், ஒரு லீற்றர் 44.37 ரூபாய்க்குத் துறைமுகத்தில் இறக்கப்படும் டீசல், 104 ரூபாய்க்கே விற்பனை செய்யப்படுவதாகவும் கூறிய ஹந்துன்நெத்தி, ஒட்டுமொத்தமாகப் பார்க்குமிடத்து, தற்போதைய அரசாங்கம், எரிபொருளுக்கு வரி ஏற்றாமல், வரிக்கு எரிபொருள் ஏற்றியிருப்பதாகக் கூறினார்.
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago