2021 ஜூன் 15, செவ்வாய்க்கிழமை

’எவரையும் கொல்ல இராணுவத்துக்கு அதிகாரமில்லை’

Niroshini   / 2021 மே 06 , மு.ப. 05:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பா.நிரோஸ்

யுத்தம் செய்து, நாட்டிலிருந்த பயங்கரவாதத்தை ஒழித்தார்கள் என்பதற்காக, எவரையும் கொலை செய்வதற்கு, இராணுவத்தினருக்கு ஒருபோதும் அனுமதி வழங்கப்படவில்லை எனத் தெரிவித்த முன்னாள் இராணுவத் தளபதி ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, கொலைக்காரர்களைப் பாதுகாக்கும் அரசாங்கத்தின் கொள்கைத் தவறெனவும் விமர்சித்தார்.

கொரோனா வைரஸ் நிலைமைகள் தொடர்பான இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர், கைது செய்யப்படுவார் என்ற அச்சத்திலேயே ஹரீன் பெர்ணான்டோ எம்.பி இருப்பதாகவும் 'ஹோர்ன்'   அடித்த குற்றத்துக்காக நபரொருவர் கைது செய்யப்படும் நிலைமைக்கு, இந்நாடு சென்றுள்ளதென்றும் இவை அனைத்தும், ஜனநாயக விரோதச் செயற்பாடுகளெனவும் சாடினார்.

“கொழும்பைச் சேர்ந்த 11 இளைஞர்களை, கடற்படையின் முன்னாள் தளபதி வசந்த கரண்ணாகொட கொலை செய்தாரென்று, பாராளுமன்றத்தில் நான் உரையாற்றிய பின்னர், தமிழினி எழுதிய புத்தகமொன்றிலும் சூசையின் மகன் வழங்கிய நேர்காணல் ஒன்றிலும், வசந்த கருண்ணாகொட உள்ளிட்ட கடற்படையினரே யுத்தத்தில் சிறப்பாகச் செயற்பட்டனர் எனத் தெரிவிக்கப்பட்டிருப்பதாக, சபையில் உள்ள எனது நண்பர் ஒருவர் கூறினார்.

“தமிழினி கூறுவது உண்மையாக இருக்கலாம். அதற்காக, தமிழினியிடமிருந்து பயங்கரவாதம் தொடர்பில் கற்றுக்கொள்ள வேண்டாம். இதேவேளை, யுத்தம் செய்தார்களென்பதற்காக, எவரை கொலை செய்யும் அதிகாரம் இராணுவத்தினருக்கு வழங்கப்படவில்லை” எனவும், பொன்சேகா எம்.பி தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .