Editorial / 2024 ஜூன் 23 , பி.ப. 06:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகராசா சரவணன்
பொலன்னறுவை பொலிஸாருக்கு வழங்கும் சன்மான பணமான 74 இலட்சம் ரூபாவை மோசடி செய்தார் என்றக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவரும் பொலிஸ் சாஜன்ட் ஒருவரை வெள்ளிக்கிழமை (21) பணியில் இருந்து இடை நீக்கம் செய்யுயப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பொலிஸ் சாஜன்ட் 2021ம் ஆண்டு பொலன்னறுவை பொலிஸ் நிலையத்தில் போக்குவரத்து பிரிவில் கடமையாற்றி வந்துள்ளார். அங்கு பொலிஸாருக்கு சன்மானமாக வழங்கும் பணமான 74 இலட்சம் ரூபாவை மோசடி செய்துள்ளநிலையில் இடமாற்றம் பெற்றறு ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்துள்ளார்.
இந்தநிலையில் இந்த மோசடி தொடர்பாக பொலன்னறுவை விசேட குற்றப் புலன்விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டுவந்தனர். அதனடிப்படையில், இவரை கடந்த 18 ம் திகதி கைது செய்து பொலன்னறுவை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
இவ்வாறு பிணையில் வெளிவந்தவரை உடனடியாக பணியில் இருந்து பொலிஸ் திணைக்களம் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
19 Nov 2025
19 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 Nov 2025
19 Nov 2025