2026 மார்ச் 17, செவ்வாய்க்கிழமை

ஏப்ரல் 12 ஆம் திகதி வரை மாத்திரமே டீசல்

Lenin Raj   / 2026 மார்ச் 17 , மு.ப. 11:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


இலங்கையில் தற்போதுள்ள எரிபொருள் கையிருப்பு மற்றும் எதிர்வரும் நாட்களில் கிடைக்கவுள்ள எரிபொருள் அளவுகள் குறித்து எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி இன்று செவ்வாய்க்கிழமை (17) நாடாளுமன்றத்தில் தெளிவுபடுத்தினார்.

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த விபரங்களை வெளியிட்டார்.

இதற்கமைய, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 12 ஆம் திகதி வரை போதுமான அளவு டீசல் கையிருப்பில் காணப்படுகுன்றது.

92 ரக பெட்ரோல் அடுத்த மாதம் ஏப்ரல் 23 ஆம் திகதி வரை கையிருப்பில் இருக்கின்றது. சூப்பர் டீசல் எதிர்வரும் மே 10-ஆம் திகதி வரை கையிருப்பில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

95 ரக பெட்ரோல் எதிர்வரும் மே மாதம் 10 ஆம் திகதி வரை கையிருப்பில் காணப்படுகின்றது.

இந்தக் கையிருப்பானது தற்போது விற்பனை நிலையங்களில் உள்ள அளவு மற்றும் விநியோகஸ்தர்களால் உறுதிப்படுத்தப்பட்டு, விரைவில் இலங்கையை வந்தடையவுள்ள எரிபொருள் கப்பல்களையும் உள்ளடக்கியது என அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X