2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

ஏறாவூர் வன்முறை: சந்தேக நபர் சரணடைந்தார்

Freelancer   / 2022 ஓகஸ்ட் 27 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு ஏறாவூரில் கடந்த மே 9 ஆம் திகதி இரவு இடம்பெற்ற வன்முறைச் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த நிலையில் தலைமறைவாகியிருந்த பிரதான சந்தேக நபர் நேற்று (26) ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீமன்றத்தில் சரணடைந்துள்ளார்.

சட்டத்தரணி ஹபீப் முஹம்மது றிபான் ஊடாக சந்தேக நபர்  சரணடைந்ததைத் தொடர்ந்து  செப்ரெம்பெர் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்ற நீதிவான் அன்வர் சதாத் உத்தரவிட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினரும் சுற்றாடல் அமைச்சருமான  நஸீர் அஹமட்டின் வாடகைக் காரியாலயம், அவரது உறவினரின் வீடு, விடுதிகளும்  தீயிட்டுக் கொளுத்தியமை கொள்ளையயடித்தமை அத்துடன்,  3 ஆடைத்தொழிற்சாலைளை சேதப்படுத்தியமை தொடர்பாக,  மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினரால் ஏற்கெனவே 38 பேர் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வந்த நிலையில் பிரதான சந்தேக நபர் நேற்று சரணடைந்துள்ளார். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .