2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

ஏ-9 வீதியின் குறுக்காக ஆர்ப்பாட்டம்

George   / 2016 ஒக்டோபர் 25 , பி.ப. 03:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன், எஸ்.என்.நிபோஜன்

கிளிநொச்சியில் பொதுமக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

ஏ - 9 வீதியின் குறுக்காக டயர்களை எரித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் செய்கின்றனர்.  ஏ - 9 வீதியை தடை செய்து, ஒருவர் வாகனங்களை மறித்துள்ளார். அவரை அப்புறப்படுத்த அங்கு வந்த பொலிஸார் ஒருவரை, அந்நபர் தாக்கியுள்ளார்.

இதனையடுத்து, அங்கு குழப்பம் ஏற்பட்டு, கலகம் அடக்கும் பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

அங்கு அதிகளவான பொதுமக்கள் கூடியமையால், பதற்றம் ஏற்பட்டது. தாக்கியவரை பொலிஸார் கைது செய்ய முற்பட்ட போது, அங்கு குழப்பம் பெரிதாகியுள்ளது.

பொலிஸாருக்கும் பொதுமக்களுக்குமிடையில் மோதல் வெடிக்கும் நிலை அங்கு காணப்படுகின்றது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .