Editorial / 2024 ஒக்டோபர் 24 , பி.ப. 12:18 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் இருந்து வருடம் தோறும் சபரிமலைக்குச் செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. மேலும் ஐயப்ப யாத்திரைகளுக்கு இந்திய அரசாங்கம் இலவச வீசாவையும் வழங்கி வருகின்றது. இந்த நிலையில் பெரும்பாலான ஐயப்ப பக்தர்கள் தங்களது பிரயாண காலத்தில் விமான டிக்கெட்டுக்காக அதிக செலவு காரணமாக கஷ்டங்களுக்குள் உள்ளாகின்றனர் என பல ஐயப்ப பக்தர்கள், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினர் பாபு சர்மாவிடம் தெரிவித்துள்ளனர்.
இந் நிலையில் முன்னைநாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியின் காரணமாக காங்கேசன் துறைக்கும் காரைக்குடிக்கும் இடையிலான கப்பல் சேவை நடைபெற்று வருகின்றது. அதே நேரம் போக்குவரத்துக்கான செலவுகளும் குறைவாக இருக்கின்றது.
அதேவேளை இந்த வசதி வாய்ப்பினை கொழும்புவாழ் ஐயப்ப பக்தர்களுக்கு மட்டுமல்ல சகல ஐயப்ப பக்தர்களுக்கும் டிசெம்பர், ஜனவரி மாதங்களில் குறித்த கப்பல் சேவையினை டக்ளஸ் தேவானந்தா மூலம் ஏற்படுத்த வேண்டும் என்ற வேண்டுகோளையும் பாபு சர்மாவிடம் ஐயப்ப பக்தர்கள் விடுத்துள்ளனர்.
ஐயப்ப பக்தர்களின் நலன் கருதி கேரளாவில் துணை தூதரகம் அமைப்பதற்கான முயற்சிகளை டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நடைபெற உள்ள பொதுத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சிக்கு பிரதிநிதித்துவம் கிடைக்குமாக இருந்தால் நிச்சயம் கொழும்புக்கும் தூத்துக்குடிக்கும் இடையிலான கப்பல் சேவையை முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மூலமாக செயற்படுத்தி தர முடியும் என ஐயப்ப பக்தர்களுக்கு பாபு சர்மா உறுதிமொழி வழங்கினார்.
59 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
2 hours ago