2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது

Freelancer   / 2022 செப்டெம்பர் 01 , மு.ப. 07:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

மன்னார் வீதித் தடையில் நேற்று (31) காலை  10.4 கிலோ ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் பெறுமதி 150 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

தலை மன்னாரிலிருந்து வங்காலை பகுதிக்கு கெப் வண்டியில் போதைப்பொருளை கொண்டு செல்ல இருவரும் முயற்சித்த வேளையில் அவர்களை இராணுவத்தினர் கைது செய்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளுக்காக இராணுவப் படையினர் குறித்த சந்தேக நபர்களையும், கைப்பற்றப்பட்ட போதைப் பொருளையும் மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .