Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2022 ஓகஸ்ட் 06 , மு.ப. 02:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதாயின் சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்படிக்கைக்கு இணக்கம் தெரிவித்தாக வேண்டும். அதனை செய்யாது பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வது சாத்தியமில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதை தவறென்றால் எந்தவொரு பாராளுமன்ற எம்.பியேனும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தால், இதற்கான மாற்றுவழிமுறை என்ன என்பதையும் முன்வைக்க வேண்டுமெனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
பொருளாதார மீட்சி திட்டம் குறித்து பல்வேறு தரப்பினர் பல மாற்றுக் கருத்துக்கள் தெரிவிக்கலாம். அவை சாத்தியமா, இல்லையா? என்பதை தாண்டி நாம் சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடியாக வேண்டும் என்றார்.
சகல கட்சிகளும் இதற்கு இணக்கம் தெரிவித்தாக வேண்டும். நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும். சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளில் நாம் எதிர்கொள்ள வேண்டிய முக்கிய பிரச்சினை, அரசாங்கங்கள் மாறும்போது கொள்கைகள் மாறுவதுதான். அதற்கு நாம் தயாரா என்பதைச் சிந்திக்க வேண்டும். அதை பாராளுமன்றத்தில் நிராகரித்தால் அதன் விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும்.
எதிர்வரும் 6 மாதங்கள் மிகவும் கடினமானவையாக இருக்கும், இது நாம் ஒருபோதும் அனுபவிக்காத காலகட்டமாக இருக்கும். முதல் 6 மாதங்கள் மிகவும் கடினமானவை. இது நாம் இதற்கு முன்னர் அனுபவிக்காத ஒரு காலகட்டமாகும். ஆனால், இந்த சவால்களை நாம் கடந்து செல்ல வேண்டும். நாங்கள் திரும்பிச் செல்ல முடியாது. பழைய பொருளாதாரக் கொள்கைகளின் விளைவுதான் இன்று நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். எனவே, நாம் மீண்டும் அந்த பொறிமுறைக்குச் செல்வதில் அர்த்தமில்லை. புதிதாக சிந்திப்போம் என்றார்.
மேலும், இலங்கை அணுசக்தியை பயன்படுத்துவது குறித்தும் அணுசக்தியை இலங்கை பயன்படுத்துவது குறித்து அறிக்கையொன்றை பெற்றுக்கொள்வது குறித்து தீவிரமாக சிந்திக்கவேண்டும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். (a)
24 minute ago
32 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
32 minute ago
37 minute ago