2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

ஐ.எம்.எப் தலைவர் வெளியிட்ட செய்தி

Freelancer   / 2022 செப்டெம்பர் 04 , பி.ப. 05:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் பொருளாதாரக் கொள்கைகளுக்கு ஆதரவளிப்பதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் பணியாளர்களுக்கும் இலங்கை அதிகாரிகளும் இடையேயான பணியாளர் மட்ட உடன்பாட்டை எட்டியமை குறித்து மகிழ்ச்சியடைவதாக,  நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா, இன்று (04) தெரிவித்துள்ளார்.

அவருடைய உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவிலேயே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் சுட்டிக்காட்டியுள்ளனார்.

இலங்கை அரசாங்கமும் சர்வதேச நாணய நிதியமும் 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்களை 48 மாத விரிவாக்கப்பட்ட நிதி உதவிக்கான உடன்படிக்கையை எட்டியுள்ளதாக கடந்த வியாழன்று (01) மத்திய வங்கியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஐ.எம்.எப் அதிகாரிகள் அறிவித்திருந்தனர்.

அது தொடர்பிலேயே கருத்து வெளியிட்ட சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர், இது இலங்கைக்கு ஒரு முக்கியமான முன்னேற்றம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .