Editorial / 2019 ஜூலை 15 , பி.ப. 05:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க இந்த வாரம் நிறைவடைவதற்குள், மகா சங்கத்தினரிடம் மன்னிப்பு கோரவில்லை என்றால், எதிர்வரும் நாள்களில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு ஐக்கிய தேசியக் கட்சியே பொறுப்புக் கூற வேண்டுமென, பௌத்த பாதுகாப்பு மன்றத்தின் நிறைவேற்று பணிப்பாளர் சுதம்ம தேரர் தெரிவித்துள்ளார்.
இன்று கண்டியில் இடம்பெற்ற நிகழ்வில் வைத்தே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களிருந்து ஐக்கிய தேசியக் கட்சியால் இவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வந்ததாகத் தெரிவித்த அவர், பிக்குகளை அவமதிப்பதன் விளைவுகள் அவருக்குத் தெரியாமல் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
எனவே முழு இலங்கையிலும் உள்ள பிக்குகள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்றும் எதிர்கால தேர்தல்களில் இவ்வாறானவர்களை நாம் தெரிவு செய்யக் கூடாதென்றும் சுதம்ம தேரர் தெரிவித்துள்ளார்.
6 hours ago
7 hours ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago
7 hours ago
7 hours ago