Editorial / 2019 செப்டெம்பர் 07 , பி.ப. 12:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கியத் தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக, தானே போட்டியிட வேண்டுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்ததாக வௌியாகும் செய்திகளை அமைச்சர் மலிக் சமரவிக்ரம மறுத்துள்ளார்.
ஐக்கியத் தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களை சந்தித்த ரணில், ஐ.தே.க பிளவுப்படக்கூடாதென்றே தெரிவித்ததாகவும் அமைச்சர் மலிக் சமரவிக்ரம கூறியதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
மேலும் நாளை(08) பிரதமரும் அமைச்சர் சஜித் பிரேமதாஸவும் நேரடியாக கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவித்துள்ள அமைச்சர் மலிக், இதன்போது இறுதித் தீர்மானமொன்று எட்டப்படுமெனவும் தெரிவித்துள்ளார்.
இச்சந்திப்பைத் தொடர்ந்து ஐ.தே.முவின் பங்காளிக் கட்சித் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படுமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
7 hours ago
9 hours ago
9 hours ago
02 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago
9 hours ago
02 May 2026