Editorial / 2019 ஓகஸ்ட் 18 , பி.ப. 03:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாளை (19) இடம்பெறவுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் குழுக்கூட்டத்தின் பின்னர், பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர் சஜித் பிரேமதாசவை சந்திக்க தயாராகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்வதற்காக செயற்குழு மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு ஆகியவற்றை கூட்டி ஏகமனதான தீர்மானமொன்றுக்கு வருமாறு கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே தெரிவித்துள்ளார்.
நாளை இடம்பெறவுள்ள கூட்டத்தின்போது, இது தொடர்பான கோரிக்கை முன்வைக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன், கட்சியின் பிரதித் தலைவரான அமைச்சர் சஜித் பிரேமதாச, பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் கலந்துரையாட எதிர்பார்த்துள்ளதாக சகல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், நாளை இடம்பெறவுள்ள வழமையான ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் குழு கூட்டத்தின் பின்னர், பிரதித்தலைவருடனான குறித்த சந்திப்பு இடம்பெறும் என தனக்கு நம்பிக்கை உள்ளதாகவும் ஹேஷா விதானகே சுட்டிக்காட்டியுள்ளார்.
19 minute ago
32 minute ago
43 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
32 minute ago
43 minute ago
2 hours ago