Editorial / 2019 ஜூலை 16 , பி.ப. 03:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய தேசியக் கட்சியிடம் ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு எந்தவித தட்டுப்பாடும் இல்லை என்று தெரிவித்துள்ள அமைச்சர் தயா கமகே, சுமார் பத்து வேட்பாளர்கள் கட்சியின் உள்ளதாகவும் கூறியுள்ளார்.
கண்டி, சிறிமல்வத்த பிரதேசத்தில் இடம்பெற்ற சமய நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர், ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு ஊடாக தகுதியான வேட்பாளர் பெயரிடப்படுவார் என்றும் அமைச்சர் தயா கமகே கூறியுள்ளார்.
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ அல்லது ராஜபக்ஷ குடும்பத்தின் யாரேனும் ஜனாதிபதி தேர்தலில் நிறுத்தப்பட்டாலும், அதனால் ஐக்கிய தேசியக் கட்சிக்கு எந்தவித சவாலும் ஏற்படாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
5 hours ago
6 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
6 hours ago
6 hours ago