2025 செப்டெம்பர் 12, வெள்ளிக்கிழமை

ஐ.தே.கட்சியின் ஆண்டு விழாவுக்கு திகதி குறிக்கப்பட்டது

Freelancer   / 2025 செப்டெம்பர் 12 , பி.ப. 06:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக் கட்சியின் 79ஆவது ஆண்டு நிறைவு விழாவை எதிர்வரும் 20ஆம் திகதி காலை 9 மணிக்கு  ஸ்ரீஜயவர்த்தனபுர கோட்டையில் அமைந்துள்ள மோனார்க் இம்பீரியல் ஹோட்டலில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான  ரணில் விக்ரமசிங்க தலைமையில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே இவ்வாறு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் 79ஆவது ஆண்டு நிறைவு விழா ஏற்கனவே 6ஆம் திகதி நடத்துவதற்கு தீர்மானித்திருந்த நிலையில்,  கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உடல் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு கட்சியின் முகாமைத்துவ குழு, விழாவை ஒத்திவைப்பதற்கு தீர்மானித்திருந்தது. 

அதன் பிரகாரம் ஒத்திவைக்கப்பட்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் 79ஆவது ஆண்டு நிறைவு விழாவை  எதிர்வரும் 20ஆம் திகதி நடத்துவதற்கு  தீர்மானிக்கப்பட்டுள்ளது. R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .