2026 மே 01, வெள்ளிக்கிழமை

ஐ.நாவில் வாக்கெடுப்பு ஒருநாள் பிந்தியது

R.Maheshwary   / 2021 மார்ச் 23 , மு.ப. 12:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

  ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில், இலங்கைக்கு எதிரான தீர்மானம் மீதான வாக்கெடுப்பு இன்று (23) செவ்வாய்க்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

இலங்கைக்கு எதிரான தீர்மானம் குறித்த விவாதம் நேற்று இடம்பெற்று, அதனைத் தொடர்ந்து வாக்கெடுப்பு இடம்பெறுமென ஏற்கெனவே  அறிவிக்கப்பட்டிருந்தது. 

ஜெனீவா நேரப்படி நேற்று (22)  காலை 9 மணிக்கு (இலங்கை நேரப்படி பிற்பகல் 1 மணிக்கு) வாக்கெடுப்பு நடத்த ஏற்பாடாகியிருந்தது. 


எனினும், நிகழ்ச்சி நிரலில் ஏற்பட்ட சில குழறுபடிகள், திட்டமிடல் பிரச்சினைகள் காரணமாக, வாக்கெடுப்பை ஒத்திவைக்க ஜெனீவாவில் உள்ள அதிகாரிகள் தீர்மானித்தனர். 
ஆனால், குறித்தொகுக்கப்பட்டுள்ள அதேநேரத்தில்தான், இன்றைய வாக்கெடுப்பு இடம்பெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

 
இதேநேரம், இந்தத் தீர்மானத்தை ஆதரிக்க பெரும்பாலான நாடுகள் முடிவு செய்துள்ளதால், வாக்களிப்பு இலங்கைக்கு எதிராக முடியும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .