2025 மே 20, செவ்வாய்க்கிழமை

ஐ.நா. அமைப்பை எதிர்த்து வழக்குத்தாக்கல் செய்ய இயலாது

Gavitha   / 2015 நவம்பர் 11 , மு.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய நாடுகள் அமைப்புக்கு எதிராக இலங்கையில் வழக்குத் தொடர முடியாதென வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. கொழும்பு மாவட்ட நீதிமன்றிலேயே, வெளிவிவகார அமைச்சு கடந்த திங்கட்கிழமை (09) மேற்கண்டவாறு  அறிவித்துள்ளது.

இலங்கைக்கு எதிரான யுத்தக் குற்றச்சாட்டுகளை சுமத்தி அந்த அமைப்பினால் வெளியிடப்பட்ட தருஸ்மன் அறிக்கை உட்பட சர்வதேச விசாரணைகளுக்கான அனைத்து பரிந்துரைகளும், சட்ட விரோதமானதென தீர்ப்பளிக்குமாறு கோரி, கொழும்பு மாவட்ட நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் பேராசிரியர் குணதாச அமரசேகரவினால் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த வழக்குக்கான காரணங்களை தெளிவுபடுத்தி, இராஜதந்திர வரப்பிரசாத சட்டத்தின் கீழ் இலங்கையில், ஐக்கிய நாடுகள் அமைப்புக்கு எதிராக வழக்குத் தொடர முடியாது என வெளிவிவகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

எனவே, இந்த வழக்கு விசாரணைகளை நடாத்த முடியாது என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

எப்படியிருப்பினும், இந்த வாதத்தை ஏற்றுக்கொள்ள முடியாதென மனுதாரரின் சட்டத்தரணி கபில கமகே தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் அமைப்பினால் இலங்கைக்கு எதிராக மேற்கொள்ளப்படுகின்ற விசாரணைகள் அனைத்துக்கும், அந்த அமைப்புக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை மீறிச் செயற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய இந்த மனு, எதிர்வரும் டிசெம்பர் மாதம் 8ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

அன்றைய தினம், இந்த வழக்கைத் தொடர்வதா இல்லையா என்று தீர்மானிக்கப்படும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X