2025 ஓகஸ்ட் 01, வெள்ளிக்கிழமை

’ஐ லவ் யூ’ கூறியவருக்கு நீதிமன்றம் கருத்து

S.Renuka   / 2025 ஜூலை 30 , மு.ப. 11:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

15 வயது சிறுமி ஒருவர், தான் வீட்டிற்குச் செல்லும் வழியில் இளைஞர் "ஐ லவ் யூ" என்று சொன்னதாகவும், இதற்கு முன்பும் பலமுறை தொல்லை கொடுத்ததாகவும் குற்றம் சாட்டியிருந்தார். அவரது புகாரின் அடிப்படையில், இந்தியாவின் போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் பொலிஸார் வழக்கு பதிவு செய்தது. இருப்பினும், போதிய ஆதாரம் இல்லாததால் விசாரணை நீதிமன்றம் ஏற்கெனவே இளைஞரை விடுவித்திருந்தது.

சத்தீஸ்கர் மாநிலம் தம்தரி மாவட்டத்தில் உள்ள குரூட் பொலிஸ் பிரிவில் நடந்த இந்த வழக்கின் தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யப்பட்டது. 

இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இளைஞர் சிறுமியிடம் தவறாக நடந்துகொண்டதாக சாட்சியங்களுடன் நிரூபிக்க முடியவில்லை. 

அவர் தவறான எண்ணத்தில் சிறுமியிடம் பழக முயற்சிக்கவும் இல்லை என்று தெரிய வந்துள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

மேலும், கீழமை நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பை மேற்கோள்காட்டி, மேன்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது.

இதையடுத்து இந்த வழக்கில் இருந்து இளைஞர் விடுவிக்கப்பட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .