2026 மார்ச் 06, வெள்ளிக்கிழமை

ஒட்டுசுட்டான் பகுதியில் மின்சாரம் தாக்கி சிறுவன் பலி

Editorial   / 2026 பெப்ரவரி 04 , மு.ப. 09:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

சண்முகம் தவசீலன்

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  புளியங்குளம்   அலகரை  பகுதியில் செவ்வாய்க்கிழமை (3) அன்று மின்சாரம் தாக்கி சிறுவன் ஒருவன்  மரண மடைந்துள்ளார்.

ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் புளியங்குளம் அலகரை கிராமத்தை சேர்ந்த  மோகனராசா லோயிதன் (வயது 5) என்றசிறுவனே இவ்வாறு மின்சாரம்  தாக்கி மரணமடைந்துள்ளார்.

இவ் விடயம் தொடர்பாக மேலும் தெரியவருகையில் 

குறித்த சிறுவன் அவரது அம்மம்மாவுடன் புல்லு வெட்டுவதற்கு சென்ற போது குறித்த புல் வெட்டும் பகுதியில் குறித்த பகுதியில்  யானைக்காக அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத மின்சார வேலியில் (நேரடியாக இலங்கை மின்சார சபையின் மின்சாரம் பாய்ச்சப்பட்ட)   மின்சாரக் கம்பியில் சிறுவனின் கழுத்து அகப்பட்டுள்ளது. 

குறித்த சிறுவன் மின்சாரம் தாக்கிய நிலையில் ஒட்டுசுட்டான் வைத்தியசாலைக்கு எடுத்து வரப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளார் 

உடலம் ஒட்டுசுட்டான் வைத்தியசாலையில் இருந்து முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு சட்டவைத்திய அதிகாரியின்  விசாரணைகளுக்காக பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது 

மேலதிக விசாரணைகளை ஒட்டுசுட்டான் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .