Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Janu / 2025 ஜூலை 15 , பி.ப. 02:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கான ஒன்லைன் ஊடாக கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ளும் முறைக்கு, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில், திங்கட்கிழமை (15) கூடிய வாராந்த அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர், பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆகியோர் இணைந்து சமர்ப்பித்த ஒருங்கிணைந்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இலங்கையர்கள் வெளிநாடுகளில் உள்ள வெளிநாடுகளில் அமைந்துள்ள இலங்கை தூதுப்பணிக்குழுக்கள்/அலுவலகங்கள் மூலம் நிகழ்நிலை முறைமை ஊடாக கடவுச்சீட்டுக்களை விண்ணப்பிப்பதற்கான முறைமையை துரிதப்படுத்துவதற்காக குறித்த செயற்பாடுகளை நிகழ்நிலையாக மேற்கொள்வதற்கு ஒத்துழைப்பு பெறுதல் தொடர்பான முன்மொழிவு புலம்பெயர்ந்தோருக்கான சர்வதேச அமைப்புக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய 20 தூதுப்பணிக்குழுக்கள்/அலுவலகங்கள் உள்ளடங்கும் வகையில் உயிர்க்குறிகள் சேரிப்பு நிலையம் மற்றும் அதற்குத் தேவையான உபகரணங்களை வழங்குதல், குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்துடன் நிகழ்நிலையில் தொடர்பு கொள்வதற்கான வசதிப்படுத்தல் மற்றும் ஒருங்கிணைவதற்கு உரிய முறைமைகள்ஃமென்பொருட்களின் அபிவிருத்தி மற்றும் தேவையான தொழிநுட்ப உதவிகளை வழங்குவதற்கான கருத்திட்டத்தை அமுல்படுத்துவதற்கு புலம்பெயர்ந்தோருக்கான சர்வதேச அமைப்பு தேவையான நிதியுதவியை வழங்குவதற்கு உடன்பாடு தெரிவித்துள்ளது.
குறித்த கருத்திட்டத்தை அமுல்படுத்துவதன் மூலம்,வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்கள் டிஜிற்றல் தொழிநுட்பத்தைப் பயன்படுத்தி துரிதமாகவும், இலகுவாகவும் கடவுச்சீட்டுகளை பெற்றுக் கொள்வதற்கான வசதிகளை வழங்குவதை முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது. அதற்கமைய, அடையாளங் கண்டுள்ள 20 இலங்கைக்கான வெளிநாட்டு தூதுப்பணிக்குழுக்கள்ஃஅலுவலகங்கள் மூலம் நிகழ்நிலை முறைமை ஊடாக கடவுச் சீட்டுக்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கருத்திட்டத்தை இவ்வாண்டு தொடக்கம் அமுல்படுத்தவுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago