2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

ஒன்றிணைந்த எதிரணியின் Top 10 பட்டியலில் தலதா அத்துகோரல

Princiya Dixci   / 2016 டிசெம்பர் 08 , மு.ப. 03:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனனி ஞானசேகரன்

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும்  ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள Top 10 அரசியல்வாதிகளின் பெயர் பட்டியலில் நான்காவதாக, வெளிநாட்டு தொழில்வாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரலவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிடம் முறைப்பாடொன்றைப் பதிவுசெய்துள்ளதாக, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் நாடாளுடனற் உறுப்பினர் மஹிந்தானந்தா அளுத்கமகே தெரிவித்தார்.

பொரளையில் நேற்று (07) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

"கூட்டு எதிரணியினால் அறிமுகப்படுத்தப்பட்ட  Top 10 பெயர் பட்டியலில் முதலாவதாக காணப்படும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீது இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைபாடு ஒன்றை பதிவுசெய்தோம். ஆனால், இதுவரை அம்முறைபாடு தொடர்பில் எவ்வித விசாரணைகளும் முன்னெடுக்கப்படவில்லை. எது எவ்வாறாயினும் இந்தத் திட்டம் ஒருபோதும் கைவிடப்படமாட்டாது" என்றார்.

இதேவேளை, "நல்லாட்சி அரசாங்கத்தின் ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுக்களைப்  பதிவுசெய்வதற்காக  www.yahapalanatop10.com என்ற வலைத்தளம் ஒன்று, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினால் நேற்று ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .