2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

ஒன்றிணைந்த எதிர்க்கட்சி அவையில் ஆர்ப்பாட்டம் நடத்தாது

Kanagaraj   / 2016 பெப்ரவரி 25 , மு.ப. 02:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் பெரும்பாலான கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளதன் காரணமாக, நாடாளுமன்றத்தில் மேற்கொள்ளப்படுவதற்குத் திட்டமிடப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கைகளைக் கைவிடத் தீர்மானித்துள்ளதாக, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று தெரிவித்தது.

ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார, நாடாளுமன்றத்தில் தம்மைத் தனித்த கட்சியாக அங்கிகரித்தல் என்ற கோரிக்கை தவிர, ஏனை கோரிக்கைகள் அனைத்தும் ஏற்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

இதன்படி, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், பொது முயற்சியாண்மைகள் குழு (கோப்), அரசாங்க பொறுப்பு முயற்சிகள் குழு (PAC), பொது மனுக் குழு ஆகியவற்றுக்கு நியமிக்கப்பட்டுள்ளதாகவும், விவாதங்களின் போது, ஒன்றிணைந்த எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அதிக நேரம் ஒதுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

அத்தோடு, நாடாளுமன்ற உறுப்பினர்களான டினேஷ் குணவர்தன, வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவன்ச ஆகியோர், நிலையியற் கட்டளை 23(2)இன் கீழ், கேள்விகளை எழுப்புவதற்கும் உரிமை வழங்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .