Kogilavani / 2021 ஜனவரி 06 , பி.ப. 01:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.சதிஸ், எஸ்.கணேசன், எம்.கிருஸ்ணா
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு, அடிப்படை நாட் சம்பளமாக, ஆயிரம் ரூபாயைப் பெற்றுக்கொடுக்க முடியாவிட்டால், கூட்டு ஒப்பந்தத்திலிருந்து தொழிற்சங்கங்களை வெளியேறுமாறு வலியுறுத்தியுள்ள தொழிலாளர் தேசிய முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம், அதன் பின்னர் அனைவரும் இணைந்து போராடலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக ஆயிரம் ரூபாய் வழங்கப்பட வேண்டும் என்று கோரி, ஹட்டன் மல்லியப்பூ சந்தியில், நேற்று (6) நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் இதனைத் தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்துரைத்த அவர், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்ற உறுதிமொழி நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் அதனை நோக்கியே பேச்சுவார்த்தை தொடர வேண்டும் என்றும் தெரிவித்தார்.
'அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படவில்லை என்றால், கையொப்பமிடமாட்டேன் என்று வடிவேல் சுரேஷ் எம்.பி தெரிவித்துள்ளார். அவரின் அறிவிப்பை நாங்கள் வரவேற்கின்றோம். வடிவேல் சுரேஷ் எம்.பியைப் போன்று, 1000 ரூபாய் அடிப்படைச் சம்பளம் வழங்கப்படாவிட்டால் ஏனையத் தொழிற்சங்கங்களும் கூட்டுஒப்பந்தத்திலிருந்து வெளியேற வேண்டும்' என்றும் திகாம்பரம் எம்.பி மேலும் கேட்டுக்கொண்டார்.
2 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago