Freelancer / 2021 டிசெம்பர் 09 , பி.ப. 01:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒமிக்ரோன் வகை திரிபு இலங்கையிலும் பிற நாடுகளிலும் வேகமாக பரவாது என ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவ பிரிவின் பணிப்பாளரும் வைத்திய நிபுணருமான சந்திம ஜீவந்தர தெரிவித்தார்.
தனது டுவிட்டர் தளத்தில் இதை பதிவிட்டுள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ஒமிக்ரோன் வகை திரிபு இலங்கையிலும் பிற நாடுகளிலும் வேகமாக பரவாது.
ஒமிக்ரோன் கோவிட் வகை குறித்து தென்னாப்பிரிக்க விஞ்ஞானிகள் குழு நடத்திய சோதனையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.
ஒமிக்ரோன் வைரஸ் தடுப்பு மருந்துகளுக்கு பதிலளிக்கவில்லை என்றாலும்,
பூஸ்டர் தடுப்பூசியிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்கான வாய்ப்பு இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், இந்த வைரஸ் மாறுபாடு பற்றி ஒரு திட்டவட்டமான முடிவுக்கு வரவில்லை என்றும், இது தொடர்பான தரவுகளைப் படிக்க அதிக நேரம் தேவைப்படுகிறது என்றும் பதிவிட்டுள்ளார். R
8 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
8 hours ago