2025 நவம்பர் 19, புதன்கிழமை

ஒருவர் கோடரியால் வெட்டிக் கொலை

Editorial   / 2024 டிசெம்பர் 13 , பி.ப. 12:47 - 0     - {{hitsCtrl.values.hits}}



 கனகராசா சரவணன்,ஏ.எச்.ஏ. ஹுஸைன்

குடும்ப தகராற்றில் சகோதரியின் கணவரான மச்சான் மீது கோடரி மற்றும் கூரிய ஆயுதங்களால் தாக்குதலில் மச்சான் உயிரிழந்த சம்பவம் வியாழக்கிழமை (12) இரவு மட்டக்களப்பு எல்லைக்கிராமமான வடமுனை ஊத்துச்சேனையில் இடம்பெற்றுள்ள கணவன்-மனைவி இருவரை கைது செய்துள்ளதாக  வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

வடமுனை ஊத்துச்சேனையைச் சேர்ந்த 48 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தையான வேலு சிவசுப்பிரமணியம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த பிரதேசத்தில் சம்பவ தினமான வியாழக்கிழமை (12) இரவு 11.00 மணியளவில் சம்பத்தில் உயிரிழந்தவரின் மனைவியின் சகோதரனுடன் மதுபோதை அருந்திவிட்டு அவர்களுக்கிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் சண்டையாகமாறியது அடுத்து சகோதரியின் கணவர் மீது கோடாரி மற்றும் கூரிய ஆயுதத்தால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது   சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது

இது தொடர்பாக தடயவியல் பிரிவு பொலிஸார் சென்று விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X