2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள்

Freelancer   / 2022 செப்டெம்பர் 02 , பி.ப. 01:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

புத்தளம் வைத்தியசாலை வரலாற்றில் முதல் தடவையாக பெண் ஒருவருக்கு ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள் பிறந்துள்ளன.

24 வயதுடைய இளம் தாய் ஒருவரே இந்தக் குழந்தைகளைப் பிரசவித்துள்ளதாக புத்தளம் வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் சுமித் என்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

ஒரு ஆண் குழந்தையும் மற்றும் மூன்று பெண் குழந்தைகளுமே பிறந்துள்ளன.

தற்போது, ​​குறித்த நான்கு குழந்தைகளும் புத்தளம் ஆதார வைத்தியசாலையின் சிறுவர் வைத்திய நிபுணர் வைத்தியர் சுரின் ஜெயவர்தன அவர்களின் மேற்பார்வையில் பாதுகாப்பாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.(R)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .