2025 டிசெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

ஒரே ஒரு சிறுநீர்: கன்னம் பழுத்தது

Editorial   / 2025 டிசெம்பர் 30 , பி.ப. 02:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்தியப்பிரதேச மாநிலம் ஹோஷங்காபாத்தில் நர்மதை நதிக்கரையில் இளைஞர் ஒருவர் சிறுநீர் கழித்ததைக் கண்டு, அங்கிருந்த ஐஏஎஸ் அதிகாரி கடும் கோபமடைந்து அந்த இளைஞரை இரண்டு முறை கன்னத்தில் அறைந்தார்.

புனிதமாகக் கருதப்படும் நர்மதை ஆற்றின் தூய்மையைக் கெடுக்கும் வகையில் நடந்துகொண்ட அந்த இளைஞரின் செயலைக் கண்டித்த அதிகாரி, பொது இடங்களில் ஒழுக்கத்தைப் பேண வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

இந்தச் சம்பவம் அங்கிருந்தவர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதிகாரியின் ஆக்ரோஷமான செயல் சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. இச்சம்பவத்தின் போது குறுக்கிட்ட அங்கிருந்த கோயில் பூசாரியையும் அந்த அதிகாரி கடுமையாக எச்சரித்தார். “உயிரோடு புதைத்துவிடுவேன்” என்று பூசாரியைப் பார்த்து அவர் மிரட்டியதாகக் கூறப்படும் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

மேலும் ஒரு அரசு உயர் அதிகாரி தவறு செய்தவரைத் தண்டிக்கும் நோக்கில் சட்டத்தைக் கையில் எடுத்ததும், ஒரு ஆன்மீகப் பெரியவரைத் தகாத வார்த்தைகளால் மிரட்டியதும் பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X