Editorial / 2026 பெப்ரவரி 11 , மு.ப. 11:12 - 0 - {{hitsCtrl.values.hits}}

காதல் என்பது ஆழமான அன்பு, ஈர்ப்பு, அக்கறை, நெருக்கம் மற்றும் பிணைப்பை வெளிப்படுத்தும் ஓர் உன்னதமான உணர்வு. இது நம்பிக்கையின் அடிப்படையில் அமைந்த, வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்றும் உணர்ச்சிகரமான பிணைப்பாகும், இது காதலர்கள், குடும்பம் அல்லது இயற்கை மீதும் ஏற்படலாம்.
எனினும், காதல் எனும் போர்வையில் அரங்கேற்றப்படும் கூத்துக்களை பார்க்கவே முடியாதுள்ளது. அந்தளவுக்கு உள்ளது.
பல பெண்களுடன் மிக நெருங்கிய தொடர்பு கொண்டவர் தன்னை மன்மத காதலன் என காட்டிக்கொள்ள முயலுகிறார். பெண்களும் ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்களை காதலிப்பார்கள். இப்போதெல்லாம் இதெல்லாம் சகஜம் என்று கூறப்படுகிறது.
வேலை செய்யும் இடத்தில் ஒருவர், போக்குவரத்தில் ஒருவர், காரில் ஒருவர், மோட்டார் சைக்கிளில் ஒருவர், ஊரில் ஒருவர் இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம். எனினும், இவையெல்லாம் ஒரு நாள் அம்பலத்துக்கு வந்து சந்தி சிரிக்க செய்துவிடும் என்பது மட்டுமே உண்மை,
வெளிமாவட்டங்களில் இருந்து கொழும்புக்கு வந்து வேலை செய்யும் இளைஞர், யுவதிகளின் காதல் அட்டகாசத்தை பார்க்கவே முடியாது. அந்தளவுக்கு மிகக் கேவலமாக இருக்கும், பொது இடங்களில், குழுச்சண்டைகளும் இடம்பெற்றுள்ளன.
அவ்வாறுதான், மலையத்தில் இருந்து கொழும்புக்கு வந்து பணியாற்றும் யுவதி, சிற்றுண்டி விற்பனை செய்யும் நிலையத்தில் பணியாற்றுகின்றார். அவர், வாடகைக்கு அறைகள் விடப்படும் மாடி வீடொன்றில் தங்கியிருந்தே பணிக்குச் செல்கின்றார்.
அந்த வாடகை வீட்டில் இன்னும் பல யுவதிகளும் தங்கியுள்ளனர். அவர்களில் ஒரு சிலர் நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள், நேரத்திற்கு வேலைக்கு வராவிட்டாலும், மிகச் சரியான நேரத்துக்கே வாடகை அறைக்குச் சென்று விடுவர்.
அந்த வாடகை வீட்டுக்கு ஆண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. எனினும், ஒற்றைக்காலில் நின்ற யுவதியை ஒன்றல்ல, இரண்டு இளைஞர்கள், நாளுக்கு நாள் ஆள்மாறி, கூட்டுக் கொண்டுவந்து வாடகை வீட்டுக்கு வெளியே விட்டு செல்வர். அதுவும் இரவு 10 - 11 மணி அளவில் அந்த யுவதி வருவாளாம்.
இது இப்படியிருக்க, தான் மறைத்து வைத்திருந்த ஏதோவொன்றை, செவ்வாய்க்கிழமை (11) நள்ளிரவில் உடைத்துள்ளார்.
சலசலப்பு சத்தம் கேட்டு கண்விழித்து கொண்ட அந்த அறையில் வாடகைக்கு இருக்கும் மற்றுமொரு யுவதி, மின் விளக்குகளை ஒளிரவிட்டு பார்த்தபோது, ஆகக்கூடுதலான குளிசைகளை விழுங்குவதற்கு அந்த யுவதி தயாராகிக் கொண்டு இருந்துள்ளார்.
நிலைமையை சுதாகரித்துக் கொண்ட மற்றைய யுவதி, வீட்டின் உரிமையாளரின் மனைவிக்கு அறிவித்துள்ளார்.
அப்பெண் வருவதற்கு முன்னரே, குளிசைகளை விழுங்க இருந்த யுவதி, தன்னை அழைத்து வரும் அந்த இரண்டு இளைஞர்களுக்கு தொலைபேசி அழைப்பை எடுத்து அறிவித்து விட்டாள்.
இருவரும் பறந்து வந்து விட்டனர். எனினும், வீட்டின் படலைக்கு உள்ளே அனுமதிகாமையினால் இவ்விரு இளைஞர்களும் வெளியே நின்று, “உனக்கே... எனக்கா” என சண்டை போட்டுக் கொண்டுள்ளனர்.
உள்ளே இருக்கும் யுவதியோ, இருவரும் எனக்கே வேண்டுமென ஒற்றைக்காலில் நின்றுள்ளார்.
இந்த சத்தத்தில் அக்கம் பக்கத்தில் இருந்தவர்களும் கண் விழித்துக் கொண்டனர். எனினும், இரவு வேலையில் இருந்து இடையில் திரும்பிய வீட்டு உரிமையாளர், அவ்விரு ஆண்களையும் அவ்விடத்திலிருந்து அனுப்பிவிட, புதன்கிழமை (11) அதிகாலை 2 மணியளவில் அனைவரும் நித்திரைக்குச் சென்றுள்ளனர்.
விசாரித்து பார்த்ததில், ஒருவர் அந்த யுவதியின் காதலன் என்றும் மற்றையவர், ஆண் நண்பர் என்பதும் அம்பலமானது. எனினும், சம்பவம் சந்தி சிரிக்கச் செய்துவிட்டதே மிச்சம்.
21 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago