2025 ஜூலை 07, திங்கட்கிழமை

ஓகஸ்ட் வரையில் தேர்தல் இல்லை?

Editorial   / 2020 ஜனவரி 31 , பி.ப. 12:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

2020 ஓகஸ்ட் மாதம் வரையில், எந்தவொரு தேர்தலும் நடத்துவதில்லை என்ற தீர்மானத்துக்கு, தற்போதைய அரசாங்கம் வந்துள்ள​து என்றும் இது தொடர்பில், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நிறுவுனர் பசில் ராஜபக்ஷ, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் தெரிவித்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.

அரசாங்கம் என்ற ரீதியில், பாரிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் உள்வீட்டுப் பிரச்சினைகள் பல உள்ளதால், அவற்றுக்குத் தீர்வு கண்ட பின்னரே, தேர்தலை நோக்கி நகர்வது உசிதமானதென்றும், ரணிலிடம் பசில் தெரிவித்திருப்பதாகக் கூறப்படுகிறது.

நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கு, இவ்வருடம் ஓகஸ்ட் மாதம் வரையில் கால அவகாசம் இருப்பதால், அதுவரையில் நாடாளுமன்றத்தைக் கலைக்கா, அவசரப்பட்டு தேர்தலை நோக்கி நகராமலிருப்பதற்கே அரசாங்கம் யோசித்து வருவதாகவும், அவர் தெரிவித்துள்ளாரென்று அறியக் கிடைக்கிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .