2026 மே 14, வியாழக்கிழமை

dd

ஓட்டோவில் திடீர் தீப்பரவல்

Editorial   / 2019 ஜூலை 29 , பி.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதுளை – மஹியங்கனை பிரதான வீதியில் மெடிதலே பிரதேசத்தில் ஓட்டோ ஒன்று திடீரென  தீப்பற்றி எரிந்துள்ளது.

கிந்துருகோட்டை பிரதேசத்திலிருந்து பண்டாரவெல நோக்கி பயணம் செய்த குறித்த ஓட்டோவில், கணவன், மனைவி, அவர்களது குழந்தை, ஓட்டோவின் சாரதியென நால்வர் பயணம் ​செய்துள்ளனர்.

ஓட்டோவின் பின்னால் தீ பரவியதை அவதானித்த சாரதி, கீழிறங்கி, பயணம் செய்த மூவரையும் உடனடியாக கீழே இறங்கச் செய்துள்ளார். பின்னர் குறித்த ஓட்டோ முழுவதுமாக தீப்பரவியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .