Freelancer / 2021 நவம்பர் 20 , பி.ப. 09:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
2022 ஜனவரி முதலாம் திகதி முதல் மூன்று மாத காலப்பகுதிக்குள் அனைத்து முச்சக்கர வண்டிகளிலும் மீற்றர் பொருத்தப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.
கண்டியில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்விடயத்தைக் குறிப்பிட்டார்.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் கையொப்பமிடப்பட்டுள்ளதாகவும், அது எதிர்காலத்தில் வெளியிடப்படும் எனவும் மீற்றர் பொருத்தும் வேலைத்திட்டம் மேல் மாகாணத்தில் இருந்து ஆரம்பிக்கப்படும் என்றார்.
எதிர்காலத்தில் மீற்றர் இல்லாமல் இயங்கும் முச்சக்கர வண்டி சாரதிகளை கைது செய்வதற்கான சட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
2022 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் முச்சக்கரவண்டித் தொழிலுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், முச்சக்கரவண்டிகளுக்கான ஒழுங்குமுறை அதிகார சபையொன்றும் ஸ்தாபிக்கப்படும் என குறிப்பிட்டார்.
மேலும், முச்சக்கரவண்டி இயக்குவோர் மற்றும் பொதுமக்களின் நலனுக்காக இவ்வாறான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மேலும் தெரிவித்தார்.
2 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
6 hours ago