Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2025 ஓகஸ்ட் 18 , மு.ப. 07:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
வவுனியா, ஓமந்தை ஏ - 9 வீதியில இடம்பெற்ற கோர விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், 13 பேர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
கண்டியில் இடம்பெற்ற மரணச்சடங்கு ஒன்றுக்குச் சென்று அங்கிருந்து முல்லைத்தீவு நோக்கிப் பயணித்த மகேந்திரா ரக வாகனம் ஓமந்தை, ஏ - 9 வீதி, மாணிக்கர்வளவுப் பகுதியில் சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்து தடம்புரண்டதுடன், எதிரே வந்த கனரக வாகனத்துடனும் மோதி விபத்துக்குள்ளாகியது
இந்தச் சந்தர்ப்பத்தில் வாகனத்தில் சிறுவர்கள், பெண்கள் உட்பட 15 இற்கும் மேற்பட்டோர் பயணித்துள்ளனர். விபத்தின்போது வாகனத்தில் இருந்த அனைவரும் வீதியில் தூக்கி வீசப்பட்டனர்.
இதன்போது வீதியால் பயணித்த பொதுமக்களின் உதவியுடன் படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.
விபத்தில் சம்பவ இடத்திலேயே பெண் ஒருவர் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர். 13 பேர் படுகாயமடைந்தநிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். (a)
35 minute ago
48 minute ago
23 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
48 minute ago
23 Aug 2025