2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

ஓய்வு பெற்ற கடற்படை அதிகாரி மீது தாக்குதல்: 6பேர் கைது

Gavitha   / 2015 செப்டெம்பர் 10 , மு.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஓய்வு பெற்ற கடற்படை அதிகாரி ஒருவர் மீது தாக்குதல் நடத்திய ஆறு பேரை பொலிஸார் புதன்கிழமை (09) கைது செய்துள்ளனர்.

கொள்ளுப்பிட்டியவில் அமைந்துள்ள இரவு விடுதியொன்றிலேயே இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.

தாக்குதலுக்குள்ளான அதிகாரி, கடுங்காயங்களுக்குள்ளான நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும்  இவ்வாறு தாக்குதல் நடத்தியவர்கள் குறித்த இரவு விடுதியில் பணியாற்றுபவர்கள் என்றும் இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .