Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 22, வியாழக்கிழமை
Thipaan / 2015 டிசெம்பர் 21 , பி.ப. 09:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதியாகப் பதவியேற்று எதிர்வரும் ஜனவரி 8ஆம் திகதியன்று ஒருவருடம் பூர்த்தியாவதையொட்டி, மேல் மாகாணத்தில் 100 அபிவிருத்தித் திட்டங்களைத் தொடக்கவுள்ளதாக, மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க, நேற்று (21) தெரிவித்தார்.
இந்தத் திட்டத்துக்காக பெருமளவிலான நிதி, தொழில்நுட்பம் மற்றும் மனிதவளம் என்பன பயன்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவித்த அவர், இலங்கையில் 21ஆம் நூற்றாண்டில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்திட்டத்தில், பாரியதொன்றாக இது காணப்படும் எனவும் தெரிவித்தார்.
அத்துடன், கட்டுநாயக்க மற்றும் மினுவாங்கொடைக்கு இடையிலான விமானநிலைய நகர் மற்றும் மாலபேயிலிருந்து ஹோமாகமை வரையிலான தொழில்நுட்ப நகர் ஆகியன அத்திட்டங்களில் உள்ளடங்குகின்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
13 minute ago
16 minute ago
21 minute ago