Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
S.Renuka / 2025 ஜூலை 06 , மு.ப. 10:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
கச்சத்தீவை இலங்கை ஒருபோதும் விட்டுக்கொடுக்காது என்று வெளியுறவு அமைச்சர் விஜித ஹெராத் கூறியுள்ளார்.
“இந்தப் பிரச்சினையைத் தீர்க்க எங்கள் இராஜதந்திர வழிகள் திறந்தே உள்ளன. ஆனால், இலங்கையின் ஒரு பகுதியை விட்டுக்கொடுக்க இலங்கை ஒருபோதும் ஒப்புக்கொள்ளாது என்பது உறுதி. இது சர்வதேச சட்டத்தால் நிறுவப்பட்ட கச்சத்தீவு,” என்றும் கூறியுள்ளார்.
தனியார் தொலைக்காட்சியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கைகள் மற்றும் கச்சத்தீவு விவகாரம் குறித்து முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, ஜூன் 27 அன்று இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், இலங்கை இந்திய மீனவர்களைக் கைது செய்யும் பிரச்சினைக்கு1975ஆம் ஆண்டு விதிக்கப்பட்ட அவசரநிலையின் போது, கையெழுத்திடப்பட்ட ஒரு ஒப்பந்தத்தின் காரணமாகும், இதன் கீழ் சில குறிப்பிட்ட பகுதிகளில் மீன்பிடிக்கும் உரிமைகள் கைவிடப்பட்டுள்ளன.
இருப்பினும், அமைச்சர் ஹெராத் இந்தப் பிரச்சினையை நிராகரித்து, கச்சத்தீவு பிரச்சினையில் முரண்பாடுகள் பாரதிய ஜனதா கட்சிக்கும் (பாஜக) எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சிக்கும் இடையிலான அரசியல் மோதல்களாகும்.
கச்சத்தீவு அருகே மீன்பிடிக்க இந்திய மீனவர்கள் இலங்கையின் கடல் எல்லைக்குள் நுழைவதாக குற்றம் சாட்டிய ஹெராத், அவர்கள் மீன்பிடி வளங்களை கொள்ளையடிப்பது மட்டுமல்லாமல், கடல் தாவரங்களையும் சேதப்படுத்துகிறார்கள் என்றும் ஆனால் இந்திய அரசாங்கம் இலங்கை கடல் பகுதியில் தொடர்ந்து சட்டவிரோத மீன்பிடித்தலை ஆதரிக்கவில்லை என்பது எங்களுக்குத் தெரியும் என்றும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகளில் மீனவர் பிரச்சினை ஒரு சர்ச்சைக்குரிய ஒன்றாகும், இலங்கை கடற்படையினர் பாக் ஜலசந்தியில் இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதுடன், தீவு நாட்டின் கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததாகக் கூறப்படும் பல சம்பவங்களில் அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்தனர் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
58 minute ago
2 hours ago
3 hours ago