2025 ஜூலை 05, சனிக்கிழமை

கஞ்சிபானி இம்ரான் விவகாரம்; மூன்று அதிகாரிகள் இடைநீக்கம்

Editorial   / 2019 டிசெம்பர் 26 , பி.ப. 02:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

புஸ்ஸ சிறைச்சாலையில்  தடுத்து வைக்கப்பட்டுள்ள போதைப்பொருள் வியாபாரியான கஞ்சிபானி இம்ரானின் சிறைக்கூண்டிலிருந்து அலைபேசி மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சிறைச்சாலை அதிகாரிகள் மூவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

சிறைச்சாலைகள் தலைமையகத்தினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் பின்னர் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

புஸ்ஸ சிறைச்சாலையில் ‘A வன் ’ சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கஞ்சிபானி இம்ரான் பயன்படுத்திய அலைபேசி கதவில் ஒளித்துவைக்கப்பட்டிருந்த நிலையில் கைப்பற்றப்பட்டிருந்தது.

இந்த சம்பவத்தில் ஜெயிலர் மற்றும் சிறைக்காவலர்கள் இருவர் இவ்வாறு  பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .