2026 ஜனவரி 14, புதன்கிழமை

காட்டேஜில் உல்லாசம்: மறு நிமிடமே குலுங்கியது

Editorial   / 2026 ஜனவரி 14 , மு.ப. 10:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 ஏற்காடு காட்டேஜுக்கு பேஸ்புக் காதலியை அழைத்து சென்று உல்லாசமாக இருந்து விட்டு, கழுத்தை நெரித்து கொலையும் செய்துள்ளார் கள்ளக்காதலன். இந்த சம்பவம் தொடர்பான விசாரணையை பொலிஸார்  நடத்தி வருகிறார்கள் எனினும், சேலம் முழுக்க இந்த காட்டேஜ் கொலை, பெரும் அதிர்ச்சியை தந்துவருகிறது.

ஏற்காடு தனியார் காட்டேஜ் ஒன்றில், திங்கட்கிழமை (12) பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் பொலிஸார்  அந்த காட்டேஜிக்கு விரைந்து சென்றனர்..

பெண் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக சொன்ன அறையை திறந்து சென்று பார்த்தபோது, அந்த பெண் அரை நிர்வாண கோலத்தில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.. அந்த பெண்ணின் கழுத்து நெரிக்கப்பட்டிருந்தது.. இதையடுத்து சடலத்தை கைப்பற்றிய பொலிஸார் , சேலம் அரசு மருத்துவமனைக்கு போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக அனுப்பி வைத்தனர்.

திங்கட்கிழமை (12) அன்று இந்த அறைக்கு இளைஞர் ஒருவருடன் இந்த பெண்ணும் வந்து தங்கியதாக காட்டேஜ் மேனேஜர் சொன்னதையடுத்து, அங்கிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை பொலிஸார்  ஆய்வு செய்தனர்.. பிறகு சம்பந்தப்பட்டவர்கள் யார் என்ற விசாரணையில் பொலிஸார்  இறங்கினார்கள்.

கொலை செய்யப்பட்ட பெண் தர்மபுரி மாவட்டம் ஏரியூரை சேர்ந்த 30 வயது சாலா என்பது தெரியவந்தது.. இவரது கணவர் பெயர் கோவிந்தராஜ் ஆனால் கணவரை பிரிந்து தன்னுடைய 2 பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்துள்ளார்.  மகன் 10ம் வகுப்பு படிக்கிறார், மகள் 9ம் வகுப்பு படிக்கிறாராம்.

சாலாவிற்கு ஃபேஸ்புக்கில் அறிமுகமாகி உள்ளார் சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகேயுள்ள தப்பக்குட்டை பூசாரியூர் காட்டுவளவை சேர்ந்த பார்த்திபன்... இவருக்கும் 30 வயதாகிறது.. எலக்ட்ரீசியன் வேலை பார்த்துவரும் பார்த்திபனுக்கும் திருமணமாகி மனைவி, மகன் இருக்கிறார்களாம்.

4 வருடங்களுக்கு முன்பு ஆரம்பமான இந்த நட்பு நாளடைவில் கள்ளக்காதலில் முடிந்துள்ளது. பல்வேறு இடங்களுக்கு வெளியில் சென்று உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். திங்கட்கிழமை (12)  பார்த்திபன்தான் சாலாவை ஏற்காட்டிற்கு அழைத்து வந்து தங்கியிருந்தார் என்பதும், பிறகு கொலை செய்து தப்பி உள்ளார் என்பதும் பொலிஸாருக்கு தெரியவந்தது.

ஆனால் அதற்குள் பார்த்திபன் தலைமறைவாகிவிட்டார்.. எனவே தனிப்படை பொலிஸார்  அவரை தீவிரமாக தேடி வந்த நிலையில்,   பொலிஸார் செவ்வாய்க்கிழமை (13) மடக்கி பிடித்து அவரை கைது செய்தனர்.

கள்ளக்காதல் ஜோடிக்கு நடுவே கொடுக்கல் வாங்கல் இருந்து வந்துள்ளது.  ரூ.7 லட்சம் வரை பார்த்திபனிடம் இருந்து இதுவரை சாலா வாங்கி உள்ளதாக தெரிகிறது அந்த பணத்தை பார்த்திபன் திரும்ப கேட்டும் சாலா தரவில்லையாம்..

திங்கட்கிழமை (12) ஏற்பாடு காட்டேஜில் கள்ளக்காதல் ஜோடி ரூம் எடுத்து தங்கி உள்ளது.. அங்கு உல்லாசமாக இருந்துவிட்டு, கொடுத்த பணத்தை பார்த்திபன் திரும்ப கேட்டாராம். ஆனால் பணத்தை சாலா மறுத்துள்ளதாக தெரிகிறது.. இதனால் மீண்டும் இவர்களுக்குள் வாக்குவாதம் வெடித்துள்ளது.. ஒருவரையொருவர் பலமாக தாக்கி கொண்டார்களாம்.

அப்போது உச்சக்கட்ட கோபமடைந்த பார்த்திபன், சாலாவின் சேலையால் அவரது கழுத்தை இறுக்கி கொன்று விட்டாராம்.. இவ்வளவும் விசாரணையில் தெரியவந்துள்ளதையடுத்து, பார்த்திபனிடம் தொடர்ந்து பொலிஸார்  விசாரித்து வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .