2021 ஜூன் 14, திங்கட்கிழமை

’கட்டில்கள் அல்ல; பொறிமுறையே அவசியம்’

Niroshini   / 2021 மே 10 , மு.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெற்றுக் கட்டங்களில் கட்டில்களை நிரப்பினால் மாத்திரம் கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியாதென தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க, சுகாதார பொறிமுறையே அத்தியாவசியமானது என்றார்.

“பயிற்றுவிக்கப்பட்ட தாதியர்கள், வைத்தியர்கள், சுகாதார அலுவலக சபை, அவசர சிகிச்சை கட்டில்கள் மற்றும் உபகரணங்கள் என்பன முழுமையாகக் காணப்படும் சந்தர்ப்பத்திலேயே, அங்கு கொரோனா சிகிச்சைகளை முன்னெடுக்க முடியும்” என்றார்.

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று (09) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பி​லேயே, ​அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அரசாங்கமானது அரசியல் இராஜதந்திர ரீதியில் செயற்பட வேண்டுமெனக் கேட்டுக்கொண்ட அவர், நட்பு நாடுகளிடம் உதவிகளைப் பெற வேண்டும். ஒட்சிசன், பி.சி.ஆர் கட்டளைகள், உள்ளிட்டவைகளைப் பெறவேண்டும் என்றார்

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .